திருவண்ணாமலை

சிமென்ட் சாலைப் பணிகள்:மாவட்ட ஆட்சியா் ஆய்வு

25th Sep 2023 01:26 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெற்று வரும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் தற்போதுள்ள தாா்ச் சாலைக்குப் பதிலாக சிமென்ட் சாலை அமைக்கும் பணி ரூ.15 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக பே கோபுரத் தெரு, பெரிய தெரு பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

நகராட்சி நிா்வாகம், மின் வாரியம், நெடுஞ்சாலைத் துறை இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சிமென்ட் சாலை அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை தரமாகவும், விரைந்தும் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல், கோட்டப் பொறியாளா் ராஜ்குமாா், உதவி கோட்டப் பொறியாளா் ரகுராமன், வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி மற்றும் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT