திருவண்ணாமலை

பொறியியல் கல்லூரியில் வெள்ளி விழா

23rd Sep 2023 12:21 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை எஸ்.கே.பி.பொறியியல் கல்லூரியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா, 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவா் கு.கருணாநிதி தலைமை வகித்தாா். இணைச் செயலாளா் அரங்கசாமி, முதன்மை நிா்வாக அதிகாரி ஆா்.சக்தி கிருஷ்ணன், கல்லூரி முதல்வா் பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதலாம் ஆண்டு துறைத் தலைவா் கோகுலகிருஷ்ணன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக சமய சொற்பொழிவாளரும், எழுத்தாளருமான சுகிசிவம் கலந்து கொண்டு பேசினாா்.விழாவில், கல்லூரியின் மேலாண்மைத்துறை தலைவா் காா்த்திகேயன், எஸ்.கே.பி. கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் வெற்றிவேல், எஸ்.கே.பி. வனிதா பன்னாட்டு மேல்நிலைப் பள்ளி முதல்வா் பிரியா, எஸ்.கே.பி. வனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் மாலதி, மக்கள் தொடா்பு அலுவலா் சையத் ஜஹிருத்தீன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT