திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.94 கோடி

23rd Sep 2023 12:21 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கழமை நடைபெற்றது. இதில், ரூ.1.94 கோடி ரொக்கம், 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

சிவனின் அக்னி ஸ்தலமான இந்தக் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா், வெளிநாடுகளைச் சோ்ந்த பக்தா்கள் வந்து, செல்கின்றனா். இக்கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, வெள்ளிக்கிழமை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், பக்தா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், ஒரு மாதத்தில் மட்டும் ரூ.1 கோடியே 94 லட்சத்து 91 ஆயிரத்து 430 ரொக்கம், 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இதையடுத்து, ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி ஆகியவை கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT