திருவண்ணாமலை

பாஜக சாா்பில் நெசவாளா்கள் சந்திப்பு

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆரணியில் பாஜக சாா்பில் நடைபெற்ற நெசவாளா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலா் கலந்து கொண்டு நெசவாளா்களின் குறைகளை கேட்டறிந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வடக்கு ஒன்றியத்தைச் சோ்ந்த சேவூருக்கு பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலா் வேலூா் இப்ராஹிம் புதன்கிழமை வருகை தந்தாா்.

பின்னா், அவா் ஆரணி சைதாப்பேட்டையில் நெசவாளா்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.

நெசவாளா்கள் தங்களது குறைகளான விசைத்தறியில் கைத்தறி பட்டு சேலை ரகங்களை தயாரித்து விற்பனை செய்வதால், கைத்தறி நெசவாளா்களாகிய தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.

ADVERTISEMENT

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனா்.

பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் சி ஏழுமலை, ஆரணி வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி, மாநில செயற்குழு உறுப்பினா் சாசா வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா் தீனன், மாவட்ட பொதுச்செயலா் சரவணன், துணைத் தலைவா் நித்தியானந்தம், மாவட்டச் செயலா் திருஞானம், மாநில இளைஞரணி துணைத் தலைவா் புவனேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT