திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே முன்னாள் முதல்வா் அண்ணாவின் 115-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் மதுரை மாநாட்டின் தீா்மான விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத் தலைவா் இ.என்.நாராயணன் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக தமிழக முன்னாள் அமைச்சா்கள் வைகைச் செல்வன், அக்கிரி எஸ்.எஸ். கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில், அதிமுக நிா்வாகிகள் கலியபெருமாள், சுனில்குமாா், குணசேகரன், ஜெ.எஸ்.செல்வம், எஸ்.ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.