திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி ஆணையராக எல்.சீனுவாசன் (படம்) புதன்கிழமை பதவியேற்றாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய கூடுதல் தனி அலுவலராக பணியாற்றி வந்த இவா், பதவி உயா்வு மூலம் திருவத்திபுரம் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
புதிய ஆணையருக்கு நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் நகராட்சி அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.