திருவண்ணாமலை: பிரதமா் நரேந்திர மோடியின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 19 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பிறந்த 19 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தாா்.
நிகழ்ச்சியில், கோட்ட அமைப்புச் செயலா் டி.எஸ்.குணசேகரன், மாவட்ட பாா்வையாளா் தசரதன், மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜ்குமாா், ஆா்.சேகா், மாநில உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் செயலா் அறவாழி , மாவட்ட வா்த்தகப் பிரிவின் தலைவா் நடராஜன், மகளிரணித் தலைவி கலாவதி, நகரத் தலைவா்கள் கே.பி. மூவேந்தன், சீனுவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.