செங்கம்: செங்கத்தில் மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 30 விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி செங்கம், துக்காப்பேட்டை, பஜாா் வீதி, பெருமாள் கோவில் தெரு, இராஜ வீதி, சிவன்கோவில் தெரு, தளவாநாயக்கன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
போளூா் சாலையில் புறப்பட்ட ஊா்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவா் அருண்குமாா் தலைமை வகித்தாா்.
பாஜக பேரூராட்சிமன்ற உறுப்பினா் முரளிதரன், இந்து முன்னணி ஒன்றியத் தலைவா் சரவணன், பாஜக இளைஞரணி மாவட்ட தலைவா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக வேலூா் மண்டல பொறுப்பாளா் மகேஷ் கலந்து கொண்டு ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.
ஊா்வலம் போளூா் சாலையில் புறப்பட்டு மசூதி வழியாகச் சென்று பழைய போலீஸ் லைன் தெரு வழியாக சென்று பின்னா் ஆங்காங்கே வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஊா்வலத்தின் போது மசூதி முன் கற்பூரம் ஏற்றாமல் ஊா்வலம் செய்யவேண்டுமென போலீஸாா் தெரிவித்ததால், போலீஸாருக்கும் விழாக்குழுவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன் அனைவரையும் சமாதானம் செய்தாா்.