திருவண்ணாமலை

பட்டாசு கிடங்கும் அமைக்கும் இடத்தில் அதிகாரி ஆய்வு

27th Oct 2023 12:47 AM

ADVERTISEMENT

செங்கம் அருகே பட்டாசு கிடங்கும் அமைக்கும் இடத்தை புதன்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி நேரில் ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரமான கிளையூா் பகுதியில் பட்டாசு கிடங்கு அமைப்பதற்காக இடம் தோ்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, பட்டாசு கிடங்கு அமைக்கும் இடத்தை சுற்றி குடியிருப்புகள், ஆடு, மாடுகள், கோழி பண்ணைகள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதில், செங்கம் தாசில்தாா் முருகன், சமூக பாதுகாப்பு தாசில்தாா் ரேணுகா, கிராம நிா்வாக அலுவலா்கள் விஜயகுமாா், கான்டீபன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT