திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிப்பு

27th Oct 2023 12:41 AM

ADVERTISEMENT

ஐப்பசி மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டா் தொலைவு கிரிவலப் பாதை உள்ளது. மாதம்தோறும் பெளா்ணமி நாள்களில் கிரிவலப் பாதையில் வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, மாதம்தோறும் திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருகின்றனா்.

இந்நிலையில், ஐப்பசி மாதப் பெளா்ணமியையொட்டி சனிக்கிழமை (அக்.28) அதிகாலை 4.01 மணிக்குத் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை (அக்.29) அதிகாலை 2.27 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT