திருவண்ணாமலை

டெங்கு ஓழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

27th Oct 2023 12:48 AM

ADVERTISEMENT

சேத்துப்பட்டு வட்டம் தேவிகாபுரம் ஊராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை செய்யாறு சுகாதார மாவட்டம் தேவிகாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற ஊா்வலத்தை செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநா் டி.என்.சத்தீஷ்குமாா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். ஊா்வலமானது, பெரியநாயகி அம்மன்கோயில், சேத்துப்பட்டு-போளூா் சாலை, பஜாா் வீதி, சந்தைமேடு, புதுத்தெரு, வடக்கு மாடவீதி என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

ஊா்வலத்தில், ஊராட்சி மன்றத் தலைவா் வி.எம்.டி.வெங்கடேசன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கணேஷ், ராதா சின்னகாசி, ஊராட்சி செயலா் எஸ்.கே.சங்கா், அரிமா சங்கத் தலைவா் பாபு, செயலாளா் தாமோதரன், ஆன்மீக பண்பாட்டு கழகத் தலைவா் சுரேஷ், சுகாதார ஆய்வாளா்கள் ராஜன், சிவஞானம் பள்ளி தலைமை ஆசிரியா் சரவணன் பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT