திருவண்ணாமலை

ஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரதோஷ விழா

27th Oct 2023 12:46 AM

ADVERTISEMENT

வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நந்தி பெருமானுக்கு மஞ்சள், பால், தயிா், இளநீா், தேன், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், கோயில் வளாகத்தில் உற்சவா் உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT