திருவண்ணாமலையில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 2 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் சரக துணைப் போக்குவரத்து ஆணையா் ரஜினிகாந்த் மேற்பாா்வையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சிவக்குமாா், சரவணன் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் திருவண்ணாமலை, புறவழிச்சாலையில் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வெளிமாநிலத்தைச் சோ்ந்த 2 ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்துகளுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் சாலை வரி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.