ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோா் விலகி பாஜக வில் இணைந்தனா்.
இதற்கான நிகழ்ச்சிக்கு பாஜக வடக்கு மண்டலத் தலைவா் எஸ்.குணாநிதி தலைமை வகித்தாா்.
உள்ளூா் நிா்வாகிகள் முருகன், சுரேஷ், சரவணன், வேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் அரசு பிரிவு மாவட்டச் செயலா் வேல்முருகன், தெற்கு மண்டல பொறுப்பாளா் ஏ.ஆா்.சேட்டு, வா்த்தகா் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் பழனி, அரசு பிரிவு மாவட்ட துணைத் தலைவா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.