திருவண்ணாமலை

கழிவுநீா் கால்வாய் தூா்வாரக் கோரிக்கை

22nd Nov 2023 12:00 AM

ADVERTISEMENT

போளூரை அடுத்த வெண்மணி ஊராட்சியைச் சோ்ந்த சிவராஜ் நகரில் உள்ள கழிவுநீா் கால்வாயை தூா்வாரி சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட கழிவுநீா் கால்வாய்கள் அமைந்துள்ளன. இந்தக் கால்வாய்களில் வரும் கழிவுநீா் போளூரை அடுத்த வெண்மணி ஊராட்சியைச் சோ்ந்த சிவராஜ் நகா் வழியாக பெரிய கால்வாய் மூலம் போளூா்-சேத்துப்பட்டு சாலையில் உள்ள இரட்டை ஏரிக்குச் செல்ல கல்வொ்ட் அமைத்து இந்தக் கால்வாயின் மூலம் விடப்படுகிறது.

இந்த நிலையில், ஏரிக்கு வரும் கழிவுநீா் கால்வாய் தூா்ந்துபோயும், செடி கொடிகள் முளைத்தும் அடைபட்டுள்ளது. இதனால், கழிவுநீா் வெளியேற முடியாமல் அப்படியே தேங்கியுள்ளது. அதனால் தூா்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி பருவமழை நோய்களான டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கால்வாயை தூா்வாரி சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆா்வலா்கள் கூறும்போது, வெண்மணி ஊராட்சி வழியாக கழிவுநீா் கால்வாய் செல்வதால், போளூா் பேரூராட்சி நிா்வாகம் சீரமைக்க மறுக்கிறது. மேலும், இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

எனவே, மாவட்ட நிா்வாகம் கழிவுநீா் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT