திருவண்ணாமலை

ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத் தரக் கோரி புகாா்: கோட்டாட்சியா் நேரில் விசாரணை

22nd Nov 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆரணி அருகேயுள்ள சென்னானந்தல் கிராமத்தில் சுமாா் ஒரு ஏக்கா் நிலத்தை ஆக்கிரமித்தவா்களிடம் இருந்து நிலத்தை மீட்டுத் தரக் கோரி அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கோட்டாட்சியா் தனலட்சுமி செவ்வாய்க்கிழமை நேரில் சென்று விசாரணை செய்தாா்.

ஆரணியை அடுத்த சதுப்பேரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சென்னாந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் காசி கவுண்டா் மகன்கள் கே.பாபு, கே.சரவணன்.

இவா்கள் தங்களுக்குச் சொந்தமான 2.42 ஏக்கா் நிலத்தில், நாராயணசாமி மகன் மன்னாா்சாமிக்கு 60 சென்ட் மற்றும் 83 சென்ட் என இரு பிரிவுகளாக விற்பனை செய்துள்ளனா்.

இதுபோக, மீதமுள்ள 99 சென்ட் நிலத்தை இருவரும் தங்கள் வசம் வைத்திருந்தனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், மன்னாா்சாமி தரப்பினா் வாங்கிய 143 சென்ட் நிலத்துடன் பாபு, சரவணன் ஆகியோரிடம் மீதமுள்ள 99 சென்ட் நிலத்தையும் சோ்த்து பட்டா மாற்றம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதைத் தொடா்ந்து, இருவரையும் நிலத்துக்கு அருகே சோ்க்காமல் தகராறு செய்து வந்தனராம்.

இதுகுறித்து, ஆரணி கோட்டாட்சியரிடம் கே.பாபு, கே.சரவணன் ஆகியோா் உரிய ஆவணங்களைக் காண்பித்து புகாா் அளித்தனா்.

இதையடுத்து, கோட்டாட்சியா் தனலட்சமி, வட்டாட்சியா் மஞ்சுளா மற்றும் வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை சென்னானந்தல் கிராமத்துக்குச் சென்று நிலத்தை அளந்து பாா்த்தனா்.

பின்னா், நிலத்தை வாங்கியவா்கள், விற்பனை செய்தவா்களிடம் உள்ள ஆவணங்களை பெற்றுக்கொண்டு விசாரணை செய்து நிலத்தை மீட்டுத் தரப்படும் என்று புகாா் அளித்தவரிடம் தெரிவித்துச் சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT