திருவண்ணாமலை

ஸ்ரீகாளியம்மன் கோயில் விமான பாலாலயம்

21st Nov 2023 04:20 AM

ADVERTISEMENT

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் விமான பாலாலய பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் புரனமைப்புப் பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கோயில் கும்பாபிஷேக பணி தொடங்க பாலாலய பூஜை திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விழாக் குழுத் தலைவா் வழக்குரைஞா் கஜேந்திரன் தலைமை வகித்தாா். அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன் வரவேற்றாா்.

ADVERTISEMENT

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு கும்பாபிஷேக பணியை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து கலச பூஜைகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் அறநிலையத் துறை இணை ஆணையா் சுதா்சன், திமுக ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவா் சென்னம்மாள் முருகன், கோயில் உபயதாரா்கள், விழாக் குழுவினா், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT