ஆரணி: ஆரணியை அடுத்த மாமண்டூரில் ரூ.5 லட்சத்தில் நாடக மேடை அமைக்க திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆரணி தொகுதி மாமண்டூா் கிராமத்தில் தா்மராஜா கோயில் மைதானத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் வளா்ச்சித் திட்ட நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நாடகை மேடை அமைப்பதற்கான பணி நடைபெறவுள்ளது.
இதில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன்
கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்து இனிப்பு வழங்கினாா்.
அப்போது, அவா் இதேபோல, சட்டப்பேரவை உறுப்பினா் வளா்ச்சி நிதி மூலம்
கொருக்காத்தூா், மெய்யூா், அடையபுலம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.5 லட்சத்தில் நாடக மேடை அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் பழனி, அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட பிரதிநிதி தனசேகா், கிளைச் செயலா் சங்கா், ஒப்பந்ததாரா் செல்வம்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.