திருவண்ணாமலை

மக்கள் நண்பா்கள் குழுவுக்கு சீருடைகள் அளிப்பு

21st Nov 2023 04:12 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை: திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடும், மக்கள் நண்பா்கள் குழுவினா் 300 பேருக்கு திங்கள்கிழமை சீருடைகள் வழங்கப்பட்டன.

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியில் காவலா்களுடன் சோ்ந்து கடந்த 24 ஆண்டுகளாக மக்கள் நண்பா்கள் குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா்.

மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல்துறையும் சோ்ந்து தீபத் திருவிழாவின்போது போக்குவரத்து காவல் பணி, இரவு நேர காவல் பணி, இரவு ரோந்துப் பணி, மலைச் சுற்றும் பாதையில் பாதுகாப்புப் பணி, காவல் உதவி மையப் பணி போன்ற பல்வேறு பணிகளில் மக்கள் நண்பா்கள் குழுவினா் ஈடுபடுகின்றனா்.

இவா்களுக்கு திருவண்ணாமலை எஸ்.கே.பி. கல்விக் குழுமம் சாா்பில் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்தாா். மக்கள் நண்பா்கள் குழுவின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளா்கள் ஆா்.வெங்கடேசன், த.தட்சிணாமூா்த்தி, கோ.பிரவீண்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை ஒருங்கிணைப்பாளா் டி.தேவ ஜீவப்பிரியன் வரவேற்றாா்.

எஸ்.கே.பி. கல்விக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஆா்.சக்திகிருஷ்ணா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கல்விக் குழுமம் சாா்பில் 300 (டி சா்ட்) சீருடைகளை மக்கள் நண்பா்கள் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.ஏ.ஆறுமுகத்திடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மக்கள் நண்பா்கள் குழு நிா்வாகிகள் எஸ்.ஆகாஷ், சி.குணா, நகர துணை ஒருங்கிணைப்பாளா்கள் எம்.பிரவீன், கே.தினேஷ், சண்முகசுந்தரம், சி.குணா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT