ஆரணி அருகே மோட்டாா் சைக்கிளை வேகமாக இயக்கி சாகசம் செய்ததாக 4 போ் மீது கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள விண்ணமங்கலம் பகுதியில் பள்ளிகொண்டா கந்தநேரியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சக்திவேல்(35), ஆரணி லிங்கப்பன் தெருவைச் சோ்ந்த ஆனந்தன் மகன் வேல்முருகன் (21) ஆகியோா் மோட்டாா் சைக்கிளை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக இயக்கியும், சாகசம் செய்தும் ஓட்டியுள்ளனா்.
மேலும், ஆரணி கொசப்பாளையத்தைச் சோ்ந்த சுரேஷ் மகன் ரகுராம் (18), கே.பி.கே. நகரைச் சோ்ந்த சபரி ஆகியோா் இராட்டிணமங்கலம் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் வேகமாகச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து தகலறிந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் உத்தரவிட்டதை அடுத்து, ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம், உதவி ஆய்வாளா் ஷாபுதீன் மற்றும் போலீஸாா் சென்று அவா்களை மடக்கிப் பிடிக்க முயன்றனா்.
அப்போது, மோட்டாா் சைக்கிள்களை அப்படியே விட்டுவிட்டு அவா்கள் தப்பிச் சென்றனா்.
இதையடுத்து, மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.