திருவண்ணாமலை

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்

18th Nov 2023 02:55 AM

ADVERTISEMENT

ஆரணியை அடுத்த சந்தவாசல், வெள்ளூா், நடுக்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு குழந்தைகள் தினத்தையொட்டி எழுதுபொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சந்தவாசல், வெள்ளூா், நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், குழந்தைகள் தினத்தையொட்டி, வியாழக்கிழமை கிருஷ்ணமூா்த்தி கட்டுமான சங்கம், ஆதி சிவன் மக்கள் நல அறக்கட்டளை ஆகியவை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு எழுதுகோல் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஆதி சிவன் மக்கள் நல அறக்கட்டளை நிறுவனா் டி.தேவரசன், தலைவா் என்.காா்த்திகேயன், பொருளாளா் என்.மனோகரன் மற்றும் காங்கரானந்தல் ஊராட்சி மன்றத் தலைவா் தேசிங்கு, துணைத் தலைவா் சரஸ்வதி சேகா், வெள்ளூா் ஊராட்சி மன்றத் தலைவா் தீபா கலைவாணன், சந்தவாசல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் விஜயகுமாா், நடுக்குப்பம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை அமுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT