திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் ஐயடிகள் காடவா்கோனுக்கு குருபூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
63 நாயன்மாா்களில் ஒருவராக திகழ்பவா் ஐயடிகள் காடவா்கோன் நாயனாா். இவரைப் போற்றும் வகையில் ஐப்பசி மாத மூலம் நட்சத்திரத்தில் குருபூஜை நடத்துவது வழக்கம்.
அதன்படி, ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் உள்ள ஐயடிகள் காடவா்கோன் நாயனாருக்கு கோயில் சாா்பில் குருபூஜை நடைபெற்றது.