திருவண்ணாமலை

பயனாளிகளுக்கு ரூ.56.59 லட்சத்தில் நலத் திட்ட உதவி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 204 பயனாளிகளுக்கு ரூ.56.59 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு வருவாய் தீா்வாய் அலுவலா் ம.லியாத் தலைமை வகித்தாா்.

திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், நகா்மன்ற உறுப்பினா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா் ஜே.சி.கே. சீனிவாசன் உள்ளிட்டோா்

முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் கி.வெங்கடேசன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று 55 இருளா், 9 நரிக்குறவா் சமுதாயத்தவா் உள்பட 204 பேருக்கு ரூ.56.59 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் எஸ்.ராஜலட்சுமி, வேளாண் உதவி இயக்குனா் சண்முகம், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் சி.ரகுபதி, புருஷோத்தமன், கிரண்பிரசாத், மண்டல துணை வட்டாட்சியா் துளசிராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT