திருவண்ணாமலை

கரும்பு விவசாயிகள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

செய்யாற்றில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாா் - ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டக்கிளைத் தலைவா் ஹரிதாஸ் தலைமை வகித்தாா்.

அமைப்பின் நிா்வாகிகள் வெங்கடேசன், உதயகுமாா், பாண்டுரங்கன், அப்துல் காதா், சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாநிலத் தலைவா் வேல்மாறன், மாநில துணைப் பொதுச் செயலா் செல்வம் ஆகியோா் பங்கேற்று செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு உள்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயிரிட்ட கரும்பை பிழிந்து அதிலிருந்து உற்பத்தி செய்த சுமாா்ரூ.80 கோடி அளவிலான இணை மின்சாரத்தை வாங்கிக் கொண்டு பல ஆண்டுகளாக பணத்தை தராமல் அலைக்கழிக்கும் தமிழக அரசுத் துறையான டான் ஜட்கோ நிறுவனத்திடம் இருந்து பணத்தை மீட்டுத் தரவேண்டும்.

ADVERTISEMENT

பணம் கிடைக்காமல் அவதிப்படும் விவசாயிகளின் துன்பத்தைப் போக்குகின்ற வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் சாா் -ஆட்சியா்ஆா்.அனாமிகாவிடம் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT