திருவண்ணாமலை

களம்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி-எட்டிவாடி வரை நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக ஆரணி-எட்டிவாடி வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடு, கடை, கொட்டகை ஆகியவை அகற்றப்பட்டன.

போளூா் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் போளூரை அடுத்த களம்பூா் அம்பேத்கா் நகா், அண்ணா சிலை ஆகிய பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

ADVERTISEMENT

உதவிக் கோட்டப் பொறியாளா் கோவிந்தசாமி, உதவிப் பொறியாளா் வெங்கடேசன், நிலஅளவா் முருகன், கிராம நிா்வாக அலுவலா் வைதீஸ்வரி, உதவி ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், உதயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT