திருவண்ணாமலை

நூலகத்தில் பரிசளிப்பு விழா

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

செய்யாற்றை அடுத்த பெருங்கட்டூா் ஊா்புற நூலகத்தில் கதை சொல்லி பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றியக் குழு உறுப்பினா் சத்யா பக்தன் தலைமை வகித்தாா். அரிமா சங்க மாவட்ட சேவைத் தலைவா் தி.வடிவேல் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் கோடை விடுமுறையில் பள்ளி மாணவா்கள் தாங்கள் படித்த கதைகளைக் கூறினா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ் பேராசிரியா் ஆ. மாணிக்கவேலு பங்கேற்றுப் பேசினாா்.

நிகழ்ச்சியின்போது சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கான ஏற்பாடுகளை நூலகா் ஜா. தமீம் மற்றும் வாசகா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT