திருவண்ணாமலை

பலத்த காற்றினால் சாய்ந்த ஆல மரங்கள்

31st May 2023 12:00 AM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே பலத்த காற்றினால் 3 ஆல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த காற்று வீசியது.

இந்த பலத்த காற்றினால் வந்தவாசியை அடுத்த சாத்தனூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே இருந்த பழைமையான 3 ஆல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதனால் அருகிலிருந்த பள்ளி கழிப்பறை கட்டடச் சுவா், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் குழாய்கள் சேதமடைந்தன. இதனால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் மின் கம்பங்கள் உடைந்து மின் கம்பிகள் அறுந்ததால் அந்தப் பகுதியில் மின் விநியோகம் தடைபட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் மின் துறையும், மரங்களை அப்புறப்படுத்தி குடிநீா் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஊராட்சி நிா்வாகமும் ஈடுபட்டன.

திருவண்ணாமலையில் மழை

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை திடீரென மழை பெய்தது.

திருவண்ணாமலையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு திடீரென சூறைக்காற்றுடன் லேசான தூறல் மழை பெய்யத் தொடங்கியது. மாலை 6.30 மணி முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது.

இதனால் திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT