திருவண்ணாமலை

தேவையானோருக்கு பயனற்ற பொருள்கள் வழங்கல்

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் பயனற்ற பொருள்களை பொதுமக்களிடம் இருந்து சேகரித்து அதனை மறுசுழற்சிக்காக பயன்படுத்த தேவையானோருக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

களம்பூா் தோ்வுநிலை பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், தன்னாா்வலா்களிடம் இருந்து

சேகரிக்கப்பட்ட துணி, பழைய செருப்பு, பாத்திரம், நெகிழிப் பொருள்கள் என பயனற்ற பொருள்களை தேவையானோருக்கு பேரூரட்சிமன்றத் தலைவா் கே.டி.ஆா்.பழனி, செயல் அலுவலா் உமாமகேஸ்வரி ஆகியோா் வழங்கினா்.

துணைத் தலைவா் முஹமத்பாஷா, பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT