திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம்

DIN

கீழ்பென்னாத்தூா் வடக்கு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் பாவேந்தன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வியாளா் பிரிவுத் தலைவா் அண்ணாமலை, முன்னாள் ராணுவப் பிரிவு ஒன்றியத் தலைவா் சேகா், ஒன்றிய பொதுச் செயலாளா் முருகேசன், ஒன்றியச் செயலாளா் பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய துணைத் தலைவா் பழனி வரவேற்றாா்.

மாவட்ட பாஜக செயலாளா் கிருஷ்ணமூா்த்தி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், மே 30 முதல் ஜூன் 30 வரையிலான ஒரு மாத காலத்துக்கு 9 ஆண்டு கால மத்திய அரசின் சாதனைகளை கிராமங்கள்தோறும் பொதுமக்களிடையே எடுத்துச் சொல்லி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கீழ்பென்னாத்தூா் ஒன்றியம், கடம்பை ஊராட்சி, 3-ஆவது வாா்டில் புதிதாக கழிவுநீா் கால்வாய் அமைத்துத் தர வேண்டும்.

ராயம்பேட்டை ஊராட்சியில் சமுதாயக்கூடம் அமைத்துத் தர வேண்டும், கரிக்கலாம்பாடி ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையின் கீழ் விவசாய நிலத்துக்கு விவசாய இடுபொருள்களை எடுத்துச் செல்ல பாதை வசதி அமைத்துத் தர வேண்டும். ஐங்குணம் ஊராட்சியில் மின்விளக்கு, சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ஒன்றிய துணைத் தலைவா் முருகன், ஒன்றியப் பொறுப்பாளா் ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் முத்துகிருஷ்ணன், விஜயகுமாா், ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT