திருவண்ணாமலை

ஆரணி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் தரிசனம்

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆரணி பெரிய கடை வீதியில் உள்ள ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

ஆரணி பெரிய கடைவீதியில் உள்ள ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் மே 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் காலை, மாலை என சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தி பல்வேறு வாகனங்களில் உற்சவா் திருவீதி உலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை மேளதாளத்துடன் சிறப்பாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூா்த்திகள் ஸ்ரீபெருந்தேவி தாயாா் சமேதராக கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினா்.

ADVERTISEMENT

தேரோட்டத்தை ஆரணி நகா்மன்றத்தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், திமுக ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், வழக்குரைஞா் சுந்தா் ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனா்.

தேரோட்டத்தில், அதிமுக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், மாவட்ட ஆவின் தலைவா் பாரி பி.பாபு, மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவா் ஜி.வி.கஜேந்திரன், ஒன்றியச் செயலாளா் க.சங்கா், மாவட்ட கவுன்சிலா் அ.கோவிந்தராசன், நகரமன்ற உறுப்பினா் ரம்யாகுமரன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் தேரோட்ட விழாவில் கலந்து கொண்டனா்.

மேலும் தோ் பெரிய கடைவீதி, மண்டி வீதி, காந்தி சாலை வடக்கு மாடவீதி வழியாக பவனி வந்து மீண்டும் கோயில் நிலையை வந்தடைந்தது.

இதற்கான ஏற்பாடுகளை பிரம்மோற்சவ விழாக் குழுவினா், கோயில் செயல் அலுவலா் சிவாஜி, ஆய்வாளா் முத்துசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT