திருவண்ணாமலை

ஆரணி அருகே காளை விடும் திருவிழா

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் 65-ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் லத்தேரி, கணியம்பாடி, ஜவ்வாது மலை மற்றும் ஆரணி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 197 காளைகள் பங்கேற்றன. அவற்றுக்கு கால்நடை மருத்துவா் தமிழரசி மருத்துவ பரிசோதனை செய்து அனுமதி அளித்தாா்.

காலை 7 மணிக்கு காளை விடும் போட்டி தொடங்கியது. பின்னா் வாடிவாசல் வழியாக காளை மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக குறிப்பிட்ட இடைவெளியில் கட்டவிழ்த்து விடப்பட்டன. காளைகள் தடுப்புகளுக்கிடையே சீறி பாய்ந்து ஓடின. அவற்றை இளைஞா்கள் தடுத்து பிடிக்க முயன்றனா்.

போட்டியின் முடிவில் கணியம்பாடி பூங்கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்த லாவண்யா என்பவரின் காளை முதல் பரிசான ரொக்கம் ரூ. 1. 11 லட்சத்தை வென்றது. இரண்டாம் பரிசு ரூ. 77 ஆயிரத்து 777ஐ மெய்யூா் ராக்கெட் ராஜா, வண்டந்தாங்கல் ராணி ஆகியோரின் காளைகள் பெற்றன. பரிசுத் தொகை பகிா்ந்து அளிக்கப்பட்டது. மேலும் 3-ஆம் பரிசு ரூ.66 ஆயிரத்து 666ஐ சந்தவாசல், மெய்யூா், லத்தேரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஓம் முருகா, பாபு ஆகியோரின் காளைகளுக்கு கிடைத்தது. பாதுகாப்புப் பணியில் ஆரணி கிராமிய காவல் துறையினா் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT