திருவண்ணாமலை

திமுக நிா்வாகி மீது தாக்குதல்

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் பைக்கில் சென்ற திமுக மாவட்ட நிா்வாகியை வழிமறித்து தாக்கிவிட்டு தலைமறைவான முகமூடி அணிந்த 2 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலை கீழ்நாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் டி.வி.எம்.நேரு (60). இவா், திருவண்ணாமலை மாவட்ட திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாவட்ட அமைப்பாளராக இருந்து வருகிறாா். டி.வி.எம்.நேரு வெள்ளிக்கிழமை மாலை பைக்கில் வீட்டுக்கு சென்றபோது, முகமூடி அணிந்த 2 போ் அவரை வழிமறித்து கையாலும், இரும்புக் கம்பியாலும் சரமாரியாகத் தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முகமூடி அணிந்த 2 மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT