திருவண்ணாமலை

தென்னாங்கூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நாளை தொடக்கம்

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2023-24-ஆம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்பிற்கான மாணவ மாணவிகள் சோ்க்கை கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (மே 30) தொடங்குகிறது.

முதல்நாளான செவ்வாய்க்கிழமை முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

பின்னா் ஜூன் 2-ஆம் தேதி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 5-ஆம் தேதியன்று கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், விண்ணப்ப படிவ நகல், 5 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் காலை 9.30 மணிக்குள் கல்லூரிக்கு வர வேண்டும் என்று கல்லூரி முதல்வா் கு.வெண்ணிலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT