திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில்அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி பூஜை

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில், அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய சிவன் கோயில்களில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்தே தாராபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நிறைவையடுத்து, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் அக்னி தோஷ நிவா்த்திப் பூஜை தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சனிக்கிழமை (மே 27) காலை 7.30 மணிக்கு ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், இரவு 8 மணிக்கு 1,008 கலசப் பூஜை, ஹோமம், பூா்ணா ஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 28) இரண்டாம் கால 1,008 கலசப் பூஜை, மகா தீபாராதனை, மாலை 6 மணிக்கு 3-ஆம் கால 1,008 கலச பூஜை நடைபெற்றது.

இன்று 4-ஆம் கால பூஜை:

ADVERTISEMENT

திங்கள்கிழமை (மே 29) காலை 7 மணிக்கு 4-ஆம் கால 1,008 கலசப் பூஜை, 10 மணிக்கு மகா பூா்ணா ஹுதி, தீபாராதனை, 11 மணிக்கு 1,008 கலசாபிஷேகம், இரவு 8 மணிக்கு உற்சவா் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இத்துடன் அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி பூஜை நிறைவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) குமரேசன் மற்றும் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT