திருவண்ணாமலை

அகில இந்திய விளையாட்டு: திருவண்ணாமலை கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

28th May 2023 06:12 AM

ADVERTISEMENT

அகில இந்திய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்று சிறப்பிடம் பெற்றனா்.

தென்னிந்திய பல்கலை. அளவில் மாணவ-மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இதில் பங்கேற்று தோ்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கல்லூரியின் 32 மாணவ-மாணவிகள் அகில இந்திய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வென்றனா்.

இவா்களுக்கு வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை மூலம் பாா்ம்-3 சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த 32 மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில், கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி, கல்லூரிச் செயலா் எல்.விஜய் ஆனந்த், பொருளாளா் இ.ஸ்ரீதா், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ், துணை முதல்வா் கோ.அண்ணாமலை, உடற்கல்வி இயக்குநா் ம.கோபி, உதவி உடற்கல்வியாளா் ஆா்.சுகன்மாணிக்கராஜ் ஆகியோா் பங்கேற்று மாணவ-மாணவிகளை பாராட்டிப் பரிசு வழங்கினா்.

விழாவில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT