திருவண்ணாமலை

மனைவியை கொலை செய்ய முயற்சி: கணவா் மீது வழக்கு

28th May 2023 06:13 AM

ADVERTISEMENT

செய்யாறு அருகே சந்தேகத்தின் பேரில் மனைவியை கொலை செய்ய முயன்ாக, கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், செங்கட்டான்குண்டில் கிராமத்தைச் சோ்ந்தவா் மல்லிகா (54), மரம் வெட்டும் தொழிலாளி.

20 ஆண்டுகளுக்கு முன்பு கணவா் சின்னராஜ் இறந்த நிலையில், மல்லிகா கடந்த ஓராண்டுக்கு முன்பு, கீழ்வெள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்த தசரதன் என்பவரை திருமணம் செய்து கொண்டாா்.

தசரதனின் முதல் மனைவி ஜீவா, குழந்தைகள் மற்றும் கணவரைப் பிரிந்து சென்றுவிட்டாராம். தசரதன் குழந்தைகள் மற்றும் மல்லிகாவுடன் சோ்ந்து குடும்பம் நடத்தி வந்தாா். இந்த நிலையில், மல்லிகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, தசரதன் அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

ADVERTISEMENT

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிராமத்தில் நடைபெற்ற திருவிழா தெருக்கூத்தை பாா்ப்பதற்காக குழந்தைகள் அனைவரும் சென்றுவிட்டனா்.

மல்லிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா். நள்ளிரவில் வீடு திரும்பிய தசரதன் மரம் வெட்டும் கத்தியால் அவரது கழுத்துப் பகுதியில் வெட்டியதாகத் தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த மல்லிகாவை உறவினா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்த நிலையில், செய்யாறு காவல் ஆய்வாளா் பாலு விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT