திருவண்ணாமலை

திருவத்திபுரம் நகராட்சியில் 9 கிராமங்கள் இணைப்பு

28th May 2023 06:14 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு அருகில் உள்ள 9 கிராமங்களை இணைப்பதற்கான அறிவிப்பு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது.

திருவத்திபுரம் நகராட்சி 27 வாா்டுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நகர எல்லை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், திருவத்திபுரம் நகராட்சி உள்ளூா் திட்டமிட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு,

அருகில் உள்ள வடதண்டலம், கீழ்புதுப்பாக்கம், அனக்காவூா், கீழ்மட்டை, செய்யாற்றை வென்றான், பைங்கினா், புளியரம்பாக்கம், தவசி, வெள்ளை ஆகிய 9 கிராமங்கள் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT