திருவண்ணாமலை

நாடாளுமன்றத்தில் செங்கோல் தமிழகத்துக்கு பெருமை: புதுவை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்

28th May 2023 06:10 AM

ADVERTISEMENT

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோல் நிறுவப்படுவது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை என்று புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.

திருவண்ணாமலையில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 800-க்கும் மேற்பட்டோா் அமர முடியும். இங்கு செங்கோல் நிறுவப்படுவதன் மூலம் வேறு எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத பெருமை தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. இதை சிலா் அரசியலாக்குவது கவலை அளிக்கிறது. நிச்சயமாக இங்கிருந்து (தமிழகம்) ஆதீனங்கள் செங்கோலை எடுத்துச் சென்று ஆட்சி மாற்றத்தின்போது கொடுத்துள்ளனா்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் எத்தனை ஆண்டுகள் இருக்குமோ அத்தனை ஆண்டுகள் செங்கோலும் அங்கு இருக்கும். இதற்காக தமிழா்கள் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும். இதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு நன்றி கடிதம் எழுதியிருக்க வேண்டும்.

தற்போது குடியரசுத் தலைவா் மீது அக்கறை கொள்வோா், குடியரசுத் தலைவா் பதவிக்கான தோ்தலில் அவருக்கு வாக்களிக்கவில்லை. அவா்கள்தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவா் திறக்க வேண்டும் என்கின்றனா் என்றாா் தமிழிசை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT