திருவண்ணாமலை

ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி தா்னா

26th May 2023 10:52 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மீசநல்லூா் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மீசநல்லூா் கிராமத்தில் ஏரிக் கால்வாயை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து பயிா் செய்வதாகவும், இதனால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இந்த ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு வட்டாரச் செயலா் அ.அப்துல் காதா் தலைமை வகித்தாா். முன்னாள் வட்டாரச் செயலா் ந.ராதாகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளா் சு.சிவக்குமாா், வழக்குரைஞா் சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதையடுத்து, ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்புப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் கி.ராஜேந்திரன் உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT