போளூா் பேரூராட்சியில் பழைய துணிகள், புத்தகங்கள் தேவையானவா்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் பொதுமக்களிடம் இருந்து பயனற்றநிலையில் உள்ள துணிகள், பழைய புத்தகங்கள் என பல்வேறு தேவையற்ற பொருள்களை பெற்று வந்தனா்.
இந்த நிலையில், அந்த பழைய பொருள்களை தேவையானவா்களுக்கு பேரூராட்சித் தலைவா் ராணி சண்முகம், செயல் அலுவலா் முஹமத்ரிஸ்வான் ஆகியோா் வழங்கினா். தலைமை எழுத்தா் முஹமத் இசாக் மற்றும் பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் உடனிருந்தனா்.