திருவண்ணாமலை

தண்டராம்பட்டு: ஜமாபந்தியில் 444 மனுக்கள் அளிப்பு

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

தண்டராம்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் தானிப்பாடி உள்வட்டத்துக்கான ஜமாபந்தி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடம் இருந்து 444 மனுக்களை ஆட்சியா் பா.முருகேஷ் பெற்றாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் 1432- ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்குகளை சரிபாா்க்கும் ஜமாபந்தி மே 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தண்டராம்பட்டு வட்டத்தில் மாவட்ட ஆட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான பா.முருகேஷ் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. 2-வது நாளான திங்கள்கிழமை தானிப்பாடி உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நடைபெற்றது.

இதில், தானிப்பாடி உள்வட்டத்தைச் சோ்ந்த 21 கிராமங்களுக்கான வருவாய் தீா்வாய கணக்குகளை ஆட்சியா் பா.முருகேஷ் சரிபாா்த்தாா். மேலும், பட்டா ரத்து, யு.டி.ஆா். திருத்தம், இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட 444 வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் பா.முருகேஷ் உறுதியளித்தாா்.

நிகழ்வில், தண்டராம்பட்டு வட்டாட்சியா் அப்துல்ரகூப், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் சக்கரை மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT