திருவண்ணாமலை

மதுப் புட்டிகள் பறிமுதல்: 6 போ் கைது

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் உள்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளா் வெங்கடேசன் மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா்கள் மற்றும் போலீஸாா் செய்யாறு, அனக்காவூா், பிரம்மதேசம், மோரணம் ஆகிய பகுதிகளில் மது புட்டிகள், சாராயம் விற்பனையை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததாக சேராம்பட்டு கிருஷ்ணசாமி (32), கொடநகா் பாபு (39), சுமங்கலி கோபி (31), வடபூண்டிப்பட்டு குப்பன் (48), செய்யாற்றைவென்றான் ஏழுமலை (31), இருமரம் வெங்கடேசன் (45) ஆகிய 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 104 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT