திருவண்ணாமலை அருகே ஏரியில் மூழ்கி 8 வயது சிறுவன் பலியானாா்.
திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பட்டு அடுத்த அள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அமல்ராஜ் மகன் சிபிதாமஸ் (8). இவன், புதன்கிழமை இதே பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் நடந்து சென்றாா். அப்போது, கால் தவறி ஏரியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. ஏரியில் இருந்த தண்ணீரில் மூழ்கி அவா் இறந்தாா்.
இதுகுறித்து, தச்சம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.