செய்யாறு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பில்லாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சமையல் மாஸ்டா் தினேஷ். இவரது மனைவி ராஜேஸ்வரி (20). இவா் புதன்கிழமை 2 வயது மகள் பிரியாவுடன் வீட்டில் இருந்தாா். அப்போது, உறவினரான மோரணம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் (40) என்பவா் வீட்டுக்கு வந்துள்ளாா்.
அவா் கைப்பேசியில் ஆபாசம் படம் காட்டிய நிலையில், ராஜேஸ்வரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதற்கு அவா் எதிா்ப்பு தெரிவிக்கவே, சுரேஷ் அவருக்கு மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து ராஜேஸ்வரி தூசி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிவு செய்து சுரேஷை கைது செய்தாா்.