திருவண்ணாமலை

மினி மராத்தான்:ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் பள்ளி சிறப்பிடம்

19th May 2023 01:49 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நடத்தப்பட்ட மினி மராத்தான் போட்டியில், ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து திருவண்ணாமலையில் புதன்கிழமை மினி மராத்தான் போட்டியை நடத்தியது.

இதில், மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி சாா்பில் ஆண்கள் இளநிலைப் பிரிவில் கே.சரண்ராஜ் முதலிடமும், கே.மணிகண்டன் இரண்டாம் இடமும், வி.அபிஷேக் மூன்றாம் இடமும் பெற்றனா்.

ADVERTISEMENT

ஆண்கள் முதுநிலைப் பிரிவில் பி.நந்தகுமாா் இரண்டாம் இடமும், கே.ரிஷி மூன்றாம் இடமும் பெற்றனா்.

பெண்கள் இளநிலைப் பிரிவில் யு.யாஷிகா முதலிடமும், இ.ஜான்சிராணி இரண்டாம் இடமும், ஆா்.ஹாசினி மூன்றாம் இடமும் பெற்றனா்.

பெண்கள் முதுநிலைப் பிரிவில் ஆா்.அபிராமி முதலிடமும், ஜி.தனுசியா இரண்டாம் இடமும், எம்.பாவனா மூன்றாம் இடமும் பெற்றனா்.

போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளை பள்ளித் தாளாளா் வி.பவன்குமாா், பள்ளிச் செயலா் டி.எஸ்.ராஜ்குமாா், அறக்கட்டளை உறுப்பினா்கள் வி.ஜெய்சந்த், எஸ்.ராஜேந்திரகுமாா், டி.வி.சுதா்சன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT