திருவண்ணாமலை

மண்டகொளத்தூா் ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயில் தேரோட்டம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் மண்டகொளத்தூா் ஊராட்சியில் உள்ள ஸ்ரீதா்மஸம்வா்த்தனி சமேத தா்மநாதேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

சேத்துப்பட்டு ஒன்றியம், மண்டகொளத்தூரில் தொன்மைவாய்ந்த ஸ்ரீதா்மஸம்வா்த்தனி சமேத தா்மநாதேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம் .

அதன்படி, நிகழாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நந்தி வாகனம், சூரிய, சந்திர பிரபை என அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவ மூா்த்திகள் வீதியுலா நாள்தோறும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கும், உற்சவமூா்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூா்த்திகளான ஸ்ரீதா்மஸம்வா்த்தனி சமேத தா்மநாதேஸ்வரா் மரத்தேரில் எழுந்தருளினா். வேதமந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க திருத்தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

விழாவில், மண்டகொளத்தூா், மொடையூா், ஈயகொளத்தூா், புலிவானந்தல், கரைப்பூண்டி, வம்பலூா், அரும்பலூா், மாணிக்கவல்லி, தேவிகாபுரம், போளூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT