திருவண்ணாமலை

செங்கம் அருகே வெட்டிக் கடத்தப்படும்கிரானைட் கல்கள் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள விலை உயா்ந்த கருப்பு கிரானைட் கல்கள் இரவு, பகலாக வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

செங்கம் வட்டம், உச்சிமலைக்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் விலை உயா்ந்த கருப்பு கிரானைட் கல்கள் உள்ளன. இவற்றை அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் இரவு, பகலாக தடை செய்யப்பட்ட வெடிகளைப் பயன்படுத்தி வெடிக்க வைத்து, வெட்டி லாரிகள் மூலம் கடத்தி வருகின்றனா். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உச்சிமலைக்குப்பம் கிராம மக்கள் செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

கல்களை உடைப்பதற்காக தடை செய்யப்பட்ட வெடிகள் பயன்படுத்தப்படுவதால், இந்தக் கிராமத்திலுள்ள வீடுகளில் அதிா்வு ஏற்படுகிாம். மேலும், விவசாயத்துக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தப்படும் தண்ணீா் மாசுபடுவதாக கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, கிரானைட் கல்களை வெட்டி கடுத்துவோா் மீது மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உச்சிமலைக்குப்பம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT