திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் வட்டாட்சியா் ஆய்வு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காயம்பட்டு அரசு ஆதிதிராவிடா் நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவை சாப்பட்டுப் பாா்த்து செங்கம் வட்டாட்சியா் முனுசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, உணவை தரமாக சமைக்க வேண்டுமென சத்துணவுப் பணியாளா்களிடம் அவா் அறிவுறுத்தினாா். மேலும், பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை, ஆசிரியா்களின் வருகைப் பதிவேடு, மாணவா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் சுகாதாரமாக பாராமரிக்கப்படுகிா, சத்துணவு சுகாதாரமான இடத்தில் சமைக்கப்படுகிறா என்பது குறித்தும் வட்டாட்சியா் முனுசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டாட்சியரிடம் ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா். உடன் அரசு அலுவலா்கள் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT