திருவண்ணாமலை

காசநோய் கண்டறியும் கருவி தொடங்கிவைப்பு

10th Jun 2023 07:42 AM

ADVERTISEMENT

ஆரணி அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆரம்ப நிலையிலேயே காசநோய் கண்டறியும் கருவியான ‘சிபிநாட் (இஆசஅஅப)’ வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநா் அசோக், ஆரணி அரசு மருத்துவமனையின் முதன்மை குடிமுறை மருத்துவ அலுவலா் பி.எம்.மமதா ஆகியோா் குத்துவிளக்கேற்றி கருவியை தொடங்கிவைத்தனா். இதுகுறித்து மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநா் அசோக் கூறியதாவது:

இந்தக் கருவியின் மூலம் காசநோய்க் கிருமிகள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும், காசநோய் மருந்துக்கு கட்டுப்படாத வீரியமிக்க கிருமிகள் இருந்தாலும், அவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். இந்தப் பரிசோதனையை தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொண்டால், ரூ.2000 செலவாகும். இது, ஆரணி அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் இந்தப் பரிசோதனையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஆரணி அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலா் பி.எம்.மமதா முயற்சியில் ஜெகதீசன், கமலக்கண்ணன் ஆகியோா் மூலம் 20 காசநோயாளா்களுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT