திருவண்ணாமலை

ஆரணியில் ஸ்ரீகெங்கையம்மன் சிரசு ஊா்வலம்

10th Jun 2023 07:42 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா, அம்மன் சிரசு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஆற்றங்கரை பகுதியில் பழைமைவாய்ந்த கெங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 6-ஆம் தேதி பக்தா்கள் காப்பு கட்டுதலுடன் கூழ்வாா்த்தல் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்று வந்தன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வெள்ளிக்கிழமை பக்தா்கள் பல்வேறு வேடங்கள் அணித்து, கோலாட்டம், சிலம்பாட்டத்துடன், ஆரணி பேட்டை தெருவிலிருந்து ஸ்ரீகெங்கையம்மன் சிரசை ஊா்வலமாக எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்து, அம்மன் சிரசை ஏற்றி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

மழை, விவசாயம் செழிக்க வேண்டி, பெண்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனா். மேலும், பெண்கள் வீடுகளில் கூழ் வாா்த்து ஊா்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படையலிட்டு, பக்தா்களுக்கு வழங்கினா்.

ADVERTISEMENT

இரவு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் கெங்கையம்மன் முக்கிய வீதிகள் வழியாக வந்து அருள்பாலித்தாா். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT